2024–25 ஆம் ஆண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வேளாண் உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது; உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலை ஆகிய இரண்டிலும் சாதனை அளவு எட்டப்பட்டது. உணவு தானிய உற்பத்தி 357.73 மில்லியன் டன்னாகவும், தோட்டக்கலை உற்பத்தி 362.08 மில்லியன் டன்னாகவும் இருந்தது. பருப்பு வகைகள், சிறுதானியங்கள், உலர் வெங்காயம், தேங்காய், நறுமணப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடம் பெற்றது. தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், கரும்பு, பருத்தி, தேயிலை போன்ற பணப்பயிர்களில் உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது. 2024–25 நிதியாண்டில் (FY25) வேளாண் ஏற்றுமதி 51.1 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.