2024 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை விசாரித்த நீதிபதி பி. கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை 2026 செப்டம்பர் 8 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் புழங்க காவல்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் குறைபாடுகளே காரணம் என்று அது கூறியது. பொறுப்பான அதிகாரிகள் மீது துறைசார் நடவடிக்கை, கள்ளச்சாராயத்தின் முக்கிய மூலமான கல்வராயன் மலைக்குத் தனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குக் கல்வி, உணவு, உறைவிடம் மற்றும் படிப்பு முடிந்தபின் அரசு வேலை, வேலைவாய்ப்புக்காகக் கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலைகள், கரியாலூர் காவல் நிலையத்தைத் தரம் உயர்த்துதல் ஆகியவற்றை அது பரிந்துரைத்தது.