ஜல் ஜீவன் இயக்கம் (JJM) 2.0-இன் கீழ், ஒவ்வொரு கிராமப்புறக் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கும் தனித்துவமான டிஜிட்டல் அடையாளமான 'சுஜல் கான் ஐடி' (Sujal Gaon ID)-ஐ ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வரைபடமிடல் மற்றும் மேலாண்மைக்காக ஒவ்வொரு திட்டத்துக்கும் தனி ID வழங்கப்படும்; இதனால் நிகழ்நேரக் கண்காணிப்பு, சிறந்த திட்டமிடல், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய திறமையான மேலாண்மை சாத்தியமாகும். 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 1.64 லட்சம் சுஜல் கான் ஐடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2028-க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் பாதுகாப்பான குழாய்க் குடிநீர் வழங்குவது இவ்வியக்கத்தின் இலக்கு.