விஷமேறி ஏற்படும் உயிரிழப்புகளுடன் தொடர்புடைய களைக்கொல்லியான பாராகுவாட் டைகுளோரைடு (Paraquat Dichloride) மீது, பூச்சிக்கொல்லிச் சட்டம், 1968-இன் கீழ் மத்திய அரசு தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதன் உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் இத்தடை பொருந்தும். உடல்நல அபாயங்கள், அதிக இறப்பு விகிதம், குறிப்பிட்ட மாற்று மருந்து (antidote) இல்லாமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய பதிவுக் குழு மற்றும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. அறுவடைக்குப் பின் களைக் கட்டுப்பாட்டுக்கு விவசாயிகள் இதனைப் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர். 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.