அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) கீழ் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, கர்நாடக கிராமீண வங்கிக்கு (KGB) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) விருது வழங்கியுள்ளது. 1,75,500 கணக்குகள் என்ற இலக்கிற்கு எதிராக, இவ்வங்கி 2,49,185 APY பதிவுகளை மேற்கொண்டு 142% சாதனை படைத்துள்ளது. APY என்பது PFRDA ஒழுங்குபடுத்தும் ஒன்றிய அரசின் ஓய்வூதியத் திட்டம்; இது முக்கியமாக அமைப்புசாரா துறைத் தொழிலாளர்களுக்கானது. இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கிராமப்புற வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் KGB போன்ற பிராந்திய ஊரக வங்கிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.