வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்ககம் (DGFT), இயற்கைத் தேனுக்கு டன்னுக்கு $1,400 என நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இறக்குமதி விலையை (MIP) 2026 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. குறைந்தபட்ச இறக்குமதி விலை என்பது, அந்த மதிப்புக்குக் குறைவான விலையில் தேனை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய முடியாது என்பதாகும். மலிவான இறக்குமதித் தேன் வருகையைத் தடுக்கவும், இந்தியத் தேன் உற்பத்தியாளர்கள் மற்றும் தேனீ வளர்ப்போரை நியாயமற்ற விலைப் போட்டியிலிருந்து பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.