மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பிரம்மகாவ் வனச்சரகத்தில், 200 கிலோவுக்கும் அதிக எடையுள்ள நான்கு வயது ஆண் புலி ஒன்று தானியங்கிக் கேமராவில் பதிவாகியுள்ளது; ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குப் புலி பதிவாவது இதுவே முதல்முறை. யவத்மால் மாவட்டத்தின் திபேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 2023இல் வெளியேறிய இப்புலி, சந்திரபூர், தாராஷிவ், லாத்தூர், அகில்யாநகர் வழியாகப் பயணித்து பீட் மாவட்டத்தை அடைந்தது. புலி (Panthera tigris) வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. புலிகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க இந்தியா 1973இல் புலிகள் திட்டத்தைத் (Project Tiger) தொடங்கியது.