இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 100 கோடி (ஒரு பில்லியன்) டன்னைத் தாண்டியுள்ளது; 2020-ல் வணிக நிலக்கரி ஏலம் தொடங்கியதிலிருந்து தனியார் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டின் முதன்மை எரிசக்தித் தேவையில் சுமார் 55% மற்றும் மின் உற்பத்தியில் 70%-க்கும் மேல் நிலக்கரி மூலம் கிடைக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய நிலக்கரி வளம் கொண்ட இந்தியா, இரண்டாவது பெரிய உற்பத்தியாளரும் நுகர்வோருமாகும். 350-க்கும் மேற்பட்ட சுரங்கங்களில் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 2015 வெளிப்படையான ஏலம் மூலம் சுரங்கத் தொகுதிகளை மறு ஒதுக்கீடு செய்ய வழிவகுத்தது. 2020 சீர்திருத்தம் சந்தை விலையில் தடையின்றி விற்பனை, தேசிய நிலக்கரிக் குறியீட்டுடன் இணைந்த வருவாய்ப் பகிர்வு முறை, தானியங்கி வழியில் 100% அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றை அனுமதித்தது.