ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 அன்று உலக நகரங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நிலையான நகரமயமாக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான, தாங்குதிறன் கொண்ட, நிலையான நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கங்கள். 2026ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: "Regenerating the City: Adequate Housing for All" (நகரை மீளுருவாக்குதல்: அனைவருக்கும் போதுமான வீடு).