மேற்கு வங்கத்தின் சிங்காலிலா தேசியப் பூங்காவில், ஆசியக் கருங்கரடி (Ursus thibetanus) அழிவின் விளிம்பிலுள்ள சிவப்புப் பாண்டாவை (Ailurus fulgens) வேட்டையாடுவதற்கான முதல் உறுதிசெய்யப்பட்ட புகைப்படச் சான்றை இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இமயமலைக் கருங்கரடி அல்லது நிலாக் கரடி (Moon bear) என்றும் அழைக்கப்படும் ஆசியக் கருங்கரடி, இமயமலை அடிவாரங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ரஷ்யத் தூரக் கிழக்குப் பகுதிகளின் காடுகளில் காணப்படுகிறது. IUCN சிவப்புப் பட்டியலில் ஆசியக் கருங்கரடி பாதிக்கப்படக்கூடிய இனமாகவும் (Vulnerable), சிவப்புப் பாண்டா அழிவாய்ப்புள்ள இனமாகவும் (Endangered – EN) வகைப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலையில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிங்காலிலா மலைத்தொடரில் அமைந்துள்ள இப்பூங்கா 78.6 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது; இதன் மேற்கு எல்லை நேபாளத்தை ஒட்டியுள்ளது.