இந்தியாவில் குழந்தைப் பருவ உடல் பருமனைச் சமாளிக்க WHO அறக்கட்டளை (WHO Foundation), நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் கீழ் பள்ளி அடிப்படையிலான சுகாதாரத் திட்டங்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் செயல்படுத்தப்பட்டு, குழந்தைகளிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீர் உணவு, உடல் செயல்பாடு ஆகியவை ஊக்குவிக்கப்படும்.
உடல்நல அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் ஆரம்ப சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இத்திட்டம் உதவும். உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுடன் தொடர்புடையது.