இந்தியாவின் முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) வினோத் ராய் எழுதிய 'When Audit Matters: CAG Interventions That Made a Difference' என்ற நூலை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய CAG-இன் தணிக்கைத் தலையீடுகளை இந்நூல் விவரிக்கிறது. CAG என்பது அரசியலமைப்பின் 148-வது பிரிவின் கீழ் அமைந்த, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளைத் தணிக்கை செய்யும் அரசியலமைப்பு அதிகார அமைப்பாகும்.