கிராமப்புற வீடுகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கவும், மாநிலத்தின் எண்ணிம உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் உத்தரப் பிரதேசம் கங்கா (Project GANGA) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற வீடுகளுக்கு நம்பகமான அகண்ட அலைவரிசை (broadband) சேவை வழங்குவது இதன் இலக்கு.