செவ்வாய் கிரகத்தின் புவியியல் மற்றும் வேதியியல் சூழலை ஒத்த பூமியிலுள்ள தளங்களைத் தமிழ்நாட்டிலும் சிலியிலும் கேரளப் பல்கலைக்கழக இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தமிழ்நாட்டின் நெய்வேலியில் மெலான்டரைட் (Melanterite) கனிமமும், திருச்சிராப்பள்ளி பேட்லேண்ட்ஸ் பகுதியிலும் சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் ஜிப்சம் கனிமமும் கண்டறியப்பட்டன. இவ்விரண்டும் நீரேற்றப்பட்ட சல்பேட் கனிமங்கள்; நீர்–பாறை வினைகளையும் செவ்வாயில் நீரின் வரலாற்றையும் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியுடன் (லிக்னைட்) தொடர்புடைய மார்கசைட் என்ற சல்பைடு கனிமம் ஆக்சிஜனேற்றம் அடைவதால் மெலான்டரைட் உருவாகிறது; வளிமண்டலத்தில் திறந்துவைக்கப்பட்ட 23 நாட்களுக்குள் அது உருவானதை ஆய்வாளர்கள் கண்டனர். ஜிப்சம் கடந்தகால நீர்ச் செயல்பாட்டைப் பதிவுசெய்வதுடன், கடந்தகால உயிரினங்களின் சாத்தியமான சான்றுகளான உயிர்க்குறிகளையும் (biosignatures) பாதுகாக்கக்கூடும்.