அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

தேசியம் 1 நிமிட வாசிப்பு

அசாமி, வங்காளம், மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய செம்மொழிகளுக்கு ஐந்து சிறப்பு மையங்கள்: ஒன்றிய அரசு ஒப்புதல்

சேமி

அசாமி, வங்காளம், மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய செம்மொழிகளுக்கு ஐந்து சிறப்பு மையங்களை (Centres of Excellence) அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இம்மையங்கள் உயர்நிலை ஆய்வுக்கும், ஒவ்வொரு மொழியின் இலக்கிய, மொழியியல் மரபைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், எண்ணிமமயமாக்கல் ஆகியவற்றுக்கும் துணைபுரியும். அசாமி மையம் தேஜ்பூர் பல்கலைக்கழகத்திலும் (அசாம்), வங்காள மையம் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திலும் (மேற்கு வங்கம்), மராத்தி மையம் புனே டெக்கான் கல்லூரியிலும் (மகாராஷ்டிரா), பாலி மையம் ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்திலும், பிராகிருத மையம் குஜராத் மத்தியப் பல்கலைக்கழகத்திலும் அமையும். இந்தியாவில் இதுவரை 11 மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மொழி செம்மொழியாக 1,500–2,000 ஆண்டுகால எழுத்துப்பூர்வ வரலாறு, வளமான பண்டைய இலக்கியம், தனித்துவமான இலக்கிய மரபு, பிற்கால வடிவங்களிலிருந்து வேறுபட்ட செவ்வியல் வடிவம் ஆகியவை தேவை.