முன்னேற விழையும் மாவட்டங்கள் (Aspirational Districts) மற்றும் முன்னேற விழையும் வட்டாரங்களில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்த, நிதி ஆயோக் மற்றும் UNICEF இந்தியா ஒரு நோக்க அறிக்கையில் (Statement of Intent - SOI) கையெழுத்திட்டுள்ளன. பின்தங்கிய பகுதிகளில் தாய்-சேய் ஊட்டச்சத்துச் சேவைகளில் இந்தக் கூட்டாண்மை கவனம் செலுத்துவதோடு, அங்கு ஊட்டச்சத்துத் திட்டங்களின் செயலாக்கத்தையும் கண்காணிப்பையும் வலுப்படுத்த முயல்கிறது. இந்த ஏற்பாட்டின் கீழ், IMPAct4Nutrition (I4N) தளம் ஊட்டச்சத்துத் திட்டங்களுக்காக நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதிகளைத் திரட்டி, தனியார் துறையின் வளங்களையும் இம்முயற்சியில் இணைக்கும்.