ஹைதராபாத்தில் பட்டம் வழங்கும் வளாகத்தை அமைப்பதற்காக, கொலராடோ டென்வர் பல்கலைக்கழகத்துக்கு (CU Denver) பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விருப்பக் கடிதம் (Letter of Intent – LoI) வழங்கியுள்ளது. இவ்வளாகம் அமைந்தால், தெலங்கானாவின் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகமாகவும், அமெரிக்க அரசுப் பல்கலைக்கழகம் ஒன்று இந்தியாவில் அமைக்கும் முதல் வளாகமாகவும் இது இருக்கும்.