நவி மும்பை நெருல் பகுதியில் பாம் பீச் சாலை அருகே உள்ள TS சாணக்யா ஈரநிலத்தில், சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 'வாட்டர் ரெயில்' (Rallus aquaticus) பறவை காணப்பட்டது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் இது 'குறைந்த அக்கறைக்குரிய' (Least Concern – LC) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.