தமிழ்நாட்டில் வசிக்கவும் பணியாற்றவும் விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக 'TNExpat' என்ற டிஜிட்டல் தளத்தை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வாழ்க்கைச் சூழல், பணிபுரிதல், பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவை குறித்த தகவல்களை இத்தளம் ஒரே இடத்தில் வழங்குகிறது. மாநிலத்தின் அன்றாட வாழ்க்கை பற்றி விளக்குவதன் மூலம், வெளிநாட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தமிழ்நாட்டைப் புரிந்துகொண்டு எளிதாகக் குடியேற இத்தளம் உதவும்.