ஞான பாரதம் இயக்கத்தின் (Gyan Bharatam Mission) கீழ், 1857-ல் தாத்யா தோபே எழுதிய கடிதம் மத்தியப் பிரதேச ஆவணக்காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாத்யா தோபே (1814–1859) 1857 பெரும் கிளர்ச்சியின் முக்கியத் தலைவர். இரண்டாம் பாஜி ராவின் வளர்ப்பு மகனான நானா சாகேபின் கீழ் பணியாற்றி, கான்பூரில் முக்கியப் போர்களை வழிநடத்தினார்; ராணி லட்சுமிபாயுடன் இணைந்து போரிட்டு, பின்னர் குவாலியரில் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டை ஏற்றார். கொரில்லாப் போர்முறை மூலம் மத்திய இந்தியாவில் எதிர்ப்பைத் தொடர்ந்தார்; ஆங்கிலேயர்கள் அவரைக் கைது செய்து விசாரித்து 1859-ல் தூக்கிலிட்டனர்.