2016 முதல் 2022 வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான மாநிலத் திரைப்பட விருதுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அந்தந்த ஆண்டுகளுக்கான சிறந்த படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி ஆகியவை தேர்வாகின. சிறந்த இயக்குநர் விருதுகள் லோகேஷ் கனகராஜ், புஷ்கர்-காயத்ரி, மாரி செல்வராஜ், இரா. பார்த்திபன், சுதா கொங்கரா, த.செ. ஞானவேல், கௌதம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நடிப்புக்கான விருதுகளை விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, நயன்தாரா, தனுஷ், ஜோதிகா, சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஆர்யா, லிஜோமோல் ஜோஸ், விக்ரம் பிரபு, சாய் பல்லவி உள்ளிட்டோர் பெற்றனர்.