தமிழ்நாடு தனது முதல் 'இருண்ட வான் பூங்கா'வை (Dark Sky Park) கொல்லிமலையில் திறந்துள்ளது. வானியல் சுற்றுலாவை (ஆஸ்ட்ரோ-டூரிசம்) ஊக்குவிப்பதும், இரவு வானத்தின் தெளிவைப் பாதுகாப்பதும் இதன் நோக்கம். ஒளி மாசைக் குறைப்பதன் மூலம் பார்வையாளர்கள், மாணவர்களிடையே வானியல் குறித்த அறிவியல் விழிப்புணர்வையும் இது பரப்பும். இயற்கையான இருளைப் பாதுகாத்து, மக்கள் நட்சத்திரங்களைக் காணவும், விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் ஏற்ற வகையில் அறிவிக்கப்பட்ட பகுதிகளே இருண்ட வான் பூங்காக்கள்.