2026 பிப்ரவரி 17 அன்று தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 20 அன்று நிறைவடைந்தது. தற்போதைய திமுக அரசின் இறுதிக் கூட்டத்தொடர் இது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர். இறுதி நாளில் 2026-27-க்கான முன்பண மானியங்கள், 2025-26-க்கான கூடுதல் செலவினங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். 2026 கோடையில் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.