ஊழல் தடுப்புச் சட்டம், 1988-இன் பிரிவு 17A குறித்து உச்ச நீதிமன்றம் மாறுபட்ட (பிளவுபட்ட) தீர்ப்பை வழங்கியது. அலுவல் பணியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஒரு பொது ஊழியர் மீது காவல்துறை விசாரணை நடத்துவதற்கு முன் அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என இப்பிரிவு கூறுகிறது. இதன் செல்லுபடித்தன்மையைப் பொதுநல வழக்குகளுக்கான மையம் (Centre for Public Interest Litigation) எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்ததால், இவ்விதியின் செல்லுபடித்தன்மை குறித்த கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.