ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ‘SMILE–Beggary Survey’ என்ற கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிச்சையெடுப்பில் ஈடுபட்டுள்ள நபர்கள் குறித்த தரவுகளை நிகழ்நேரத்தில் சேகரிக்க இச்செயலி உதவுகிறது; SMILE திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேம்படுத்தவும் இது உதவும். SMILE என்பது ‘Support for Marginalized Individuals for Livelihood and Enterprise’ (வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்காக விளிம்புநிலை மக்களுக்கான ஆதரவு) என்பதன் சுருக்கமாகும். பிச்சையெடுப்பில் ஈடுபடுவோர் மற்றும் திருநர்கள் ஆகியோரின் முழுமையான மறுவாழ்வை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.