மருத்துவ ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்க, மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழு (CCRAS) – தேசிய இந்திய மருத்துவ மரபு நிறுவனம் (NIIMH), கேரளாவின் சேவதி அருங்காட்சியகம் மற்றும் இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (SEMIRI) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் பற்றிய அரிய நூல்கள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட சுவடிகளை SEMIRI பாதுகாத்து வருகிறது. நூற்றுக்கணக்கான மருத்துவச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கி, தலைப்பு, ஆசிரியர், பொருள், எழுத்துமுறை, மொழி, பொருள்வகை, நிலை, தோற்றம் ஆகிய விவரங்களுடன் விளக்கப் பட்டியல் தயாரிக்க CCRAS-NIIMH தொழில்நுட்ப, அறிவார்ந்த ஆதரவு வழங்கும். இதனால் நலிந்த சுவடிகள் பாதுகாக்கப்பட்டு, ஆயுர்வேதம் மற்றும் இந்திய அறிவு மரபுகள் (IKS) ஆய்வுக்குக் கிடைக்கும்.