அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

சுற்றுச்சூழல் 1 நிமிட வாசிப்பு

₹767 கோடி ஒதுக்கீட்டுடன் 2030–31 வரையிலான தேசியக் கடலோர இயக்கம் 2.0 வழிகாட்டுதல்கள் வெளியீடு

சேமி

தேசியக் கடலோர இயக்கம் (NCM) 2.0-க்கான செயல்படுத்தல் வழிகாட்டுதல்களை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் புது தில்லியில் வெளியிட்டார். NCM 2.0 என்பது ₹767 கோடி ஒப்புதல் பெற்ற செலவினத்துடன் 2030–31 வரை செயல்படுத்தப்படும் மத்தியத் துறைத் திட்டம் (Central Sector Scheme). இது 9 கடலோர மாநிலங்கள், 4 ஒன்றியப் பிரதேசங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது. கடலோரப் பகுதிகளின் தாங்குதிறனையும் நிலைத்தன்மையையும் வலுப்படுத்துவதும், நீலப் பொருளாதாரத்தை (blue economy) ஆதரிப்பதும் இதன் முக்கிய நோக்கங்கள். கடலோரச் சூழல் அமைப்பு மீட்டெடுப்பு, மாசுக் கட்டுப்பாடு, பல்லுயிர்ப் பாதுகாப்பு, நிலையான சுற்றுலா, பாதிப்புறு தன்மை மதிப்பீடு ஆகியவை இதன் செயல்பாடுகளாகும்.