2024-25 முதல் 2028-29 வரையிலான காலத்திற்கு, மொத்தம் ₹6,839 கோடி நிதியில் துடிப்பான கிராமங்கள் திட்டம்-II (Vibrant Villages Programme-II - VVP-II) க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சர்வதேச நில எல்லைகளை ஒட்டியுள்ள கிராமங்களை இத்திட்டம் மேம்படுத்தும்; ஏற்கெனவே முதல் கட்டத்தின் (VVP-I) கீழ் உள்ள வடக்கு எல்லை இதில் சேர்க்கப்படவில்லை. அருணாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், ஜம்மு-காஷ்மீர், லடாக், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இத்திட்டம் உள்ளடக்குகிறது.