புது தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நார்த் மற்றும் சவுத் பிளாக் கட்டடங்களில், சுமார் ₹3,230 கோடி மதிப்பீட்டில் 'யுகே யுகீன் பாரத்' தேசிய அருங்காட்சியகத்தை உருவாக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த வரலாற்றுக் கட்டடங்களை இந்தியாவின் நாகரிகம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் கலாச்சார நிறுவனமாக ஒன்றிய கலாச்சார அமைச்சகம் மாற்றும்.