இந்தியாவில் இயங்கி வரும் அணுமின் நிலையம் ஒன்றுக்குத் தலைமை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை ஆர்.எம். நாச்சம்மை பெற்றுள்ளார். கர்நாடகாவிலுள்ள கைகா மின் உற்பத்தி நிலையத்தின் 3 மற்றும் 4-ஆம் அலகுகளின் தலைமைக் கண்காணிப்பாளராக (Chief Superintendent) 2026 மார்ச் 15 முதல் அவர் பொறுப்பேற்கிறார். இவ்விரு அணு உலை அலகுகளின் இயக்கத்துக்கு அவர் பொறுப்பாவார். இந்திய அணுசக்தித் துறையில் பெண்களுக்கு இது ஒரு மைல்கல்லாகும்.