இந்தியாவும் ரஷ்யாவும் RELOS (Reciprocal Exchange of Logistics Agreement – பரஸ்பரத் தளவாடப் பரிமாற்ற ஒப்பந்தம்) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. இது இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
- அணுகல்: அமைதிக் காலத்திலும் போர்க் காலத்திலும் ஒருவர் மற்றவரின் ராணுவத் தளங்கள், துறைமுகங்கள், விமானத் தளங்களைப் பயன்படுத்தலாம்.
- வரம்புகள்: ஒருவர் மற்றவரின் பகுதியில் அதிகபட்சம் 3,000 வீரர்கள், 5 போர்க்கப்பல்கள், 10 விமானங்களை நிலைநிறுத்தலாம்.
- ஆதரவு: எரிபொருள் நிரப்புதல், பழுதுபார்ப்பு, பராமரிப்பு, உதிரி பாகங்கள் வழங்குதல்.
- கட்டணம்: நேரடிப் பணம் செலுத்துவதற்குப் பதிலாகப் பொருட்கள், சேவைகளின் பரிமாற்றம் மூலம் செலவுகளைச் சரிசெய்யலாம்.
- உத்திசார் பயன்: ஆர்க்டிக் பகுதி உட்பட ரஷ்ய வசதிகளை இந்தியா அணுகலாம்; இந்தியப் பெருங்கடலில் ரஷ்யாவுக்கு ஆதரவு கிடைக்கும்.