கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley) தேசியப் பூங்காவில், ஒரே உயிரினத்தில் ஆண் மற்றும் பெண் பண்புகள் இரண்டும் காணப்படும் ‘கைனான்ட்ரோமார்பி’ (gynandromorphy) என்ற அரிய நிலை கொண்ட நன்னீர் நண்டு ஒன்றை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
- இந்த நண்டு வேலா கார்லி (Vela carli) இனத்தைச் சேர்ந்தது.
- கெகார்சினூசிடே (Gecarcinucidae) என்ற நன்னீர் நண்டுக் குடும்பத்தில் இத்தகைய நிலை பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
- வேலா கார்லி மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய (endemic) இனம்; காட்டுச் சூழலில் மரப் பொந்துகளில் வாழ்கிறது.