சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (RGGGH), தென்னிந்தியாவின் முதல் சேக்ரல் நியூரோமாடுலேஷன் (Sacral Neuromodulation – SNM) அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது. சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை ஒழுங்குபடுத்தும் கருவியை உடலுக்குள் பொருத்துவதன் மூலம் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நரம்புகளுக்குச் சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம், வழக்கமான சிகிச்சைக்குப் பலனளிக்காத நோயாளிகளுக்குச் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை மேம்படுத்த இக்கருவி உதவுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்தச் சாதனை, மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கும் தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் திறனை எடுத்துக்காட்டுகிறது.