அரிய மண் கனிமங்களுக்கான இந்தியாவின் முதல் ஆய்வு உரிமம் ராஜஸ்தானில், பாலோத்ரா மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய முக்கியக் கனிமக் கட்டமைப்பின் கீழ் இது மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துக்கு (CMPDI) வழங்கப்பட்டது.
இத்தொகுதிகளில் லாந்தனம், சீரியம், பிரசியோடைமியம், நியோடைமியம் இருப்பதாகப் புவியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாதுகாப்பு, விண்வெளி, குறைக்கடத்திகள், மின்னணுவியல், தொலைத்தொடர்பில் அரிய மண் தனிமங்கள் பயன்படுகின்றன.