குடியரசுத் தலைவர் மாளிகையை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலைக்குப் பதிலாக சி. ராஜகோபாலாச்சாரியின் சிலை வைக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். 1878 டிசம்பர் 10 அன்று சேலத்தில் பிறந்த ராஜாஜி, சுதந்திர இந்தியாவின் முதலும் கடைசியுமான இந்திய கவர்னர் ஜெனரல் ஆவார். 1930-ல் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தைத் தலைமையேற்று நடத்திய அவர், 1944-ல் 'ராஜாஜி திட்டம்' (C.R. Formula) வகுத்தார்; 1954-ல் முதன்முதலில் பாரத ரத்னா பெற்றவர்களில் ஒருவர்.