குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) 'கிரந்த் குடீர்' என்ற நூல் இல்லத்தைத் திறந்து வைத்தார். தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்காளம் உள்ளிட்ட இந்தியாவின் 11 செம்மொழிகளில் சுமார் 2,300 நூல்கள் இங்கு உள்ளன. பனையோலை, காகிதம், மரப்பட்டை மற்றும் துணியில் எழுதப்பட்ட சுமார் 50 கையெழுத்துப் படிகளும் இங்கு உள்ளன.