புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், ஒன்றிய ரயில்வே அமைச்சகத்துக்கு PM சூர்ய கர் சிறப்பு விருது 2026-ஐ (PM Surya Ghar Excellence Award 2026) வழங்கினார். “ஒன்றிய அமைச்சகங்கள்/துறைகளால் அதிக எண்ணிக்கையிலான கட்டடங்களில் சூரிய மின்சக்தி அமைத்தல்” (Maximum Buildings Solarized by Central Ministries/Departments) பிரிவில் ரயில்வே அமைச்சகம் முதலிடம் பெற்றது. 2024 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட PM சூர்ய கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா, ஒரு கோடி வீடுகளில் கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதையும், தகுதியான வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.