ஊட்டச்சத்து, சுகாதாரம், ஆரம்பக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி, குழந்தைகள் நலன், மகளிர் பாதுகாப்பு ஆகியவற்றில் அமைச்சகம் மேற்கொள்ளும் பணிகளுக்கான ஒற்றை டிஜிட்டல் இணையதளமான 'பங்குடி' (PANKHUDI)-ஐ ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், அதிகமான கூட்டாளிகள் பங்கேற்க வழிவகுக்கவும் இது நோக்கம் கொண்டது. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள், 5,000 குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்கள், சுமார் 800 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (One Stop Centres) மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு இது உதவும்.