குள்ள லில்லிடர்ஃப் அல்லது மோண்டோ புல் என அழைக்கப்படும் பசுமை மாறாப் பல்லாண்டுத் தாவரமான ஓஃபியோபோகான் ஜப்பானிகஸ் (Ophiopogon japonicus), அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் இந்தியாவில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'ஓஃபியோபோகோனிஸ் ரேடிக்ஸ் (மைடாங்)' எனப்படும் இதன் கிழங்கு வேர்கள் பாரம்பரியச் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.