புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 80-வது சுற்றின் கீழ் நடத்தப்பட்ட 'குடும்ப சமூக நுகர்வு: சுகாதாரம்' (Household Social Consumption: Health) கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.
- நோய் பாதிப்பு: சுமார் 13.1% பேர் நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவித்தனர்; 2017–18-இல் இது 7.5% ஆக இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரிடையே அதிகம்.
- மருத்துவமனையில் அனுமதி: சுமார் 2.9%; முதியோர் மற்றும் சிறு குழந்தைகளிடையே அதிகம்.
- மருத்துவமனைப் பிரசவங்கள்: சுமார் 96%.
- சுகாதாரக் காப்பீடு: பெரும்பாலும் அரசுத் திட்டங்கள் மூலம் சுமார் 44–47% ஆக உயர்ந்துள்ளது.
- நோய் முறை: தொற்று நோய்கள் குறைந்துள்ளன; 30 வயதுக்குப் பிறகு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளன.