ஆசியாவுக்கான தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு–போக்குவரத்து முன்முயற்சியின் இரண்டாம் கட்டத்தின் (NDC-TIA II) கீழ், நிதி ஆயோக் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு முகமையான 'டாய்ச் கெசெல்ஷாஃப்ட் ஃபூர் இன்டர்நேஷனல் சுசாமென்ஆர்பைட்' (GIZ) ஆகியவை செயலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜெர்மனியின் சர்வதேசக் காலநிலை முன்முயற்சி (IKI) நிதியளிக்கும் இந்தப் பிராந்திய ஒத்துழைப்புத் திட்டம், ஆசியாவில் குறைந்த கார்பன் போக்குவரத்தை ஊக்குவிக்கிறது. இந்தியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கவனம் செலுத்தி, மின்சார வாகனப் போக்குவரத்து மூலம் போக்குவரத்து உமிழ்வைக் குறைப்பது இதன் நோக்கம். மின்சார லாரிகள், அதிவேக மின்னேற்ற நிலையங்கள், மின் கட்டமைப்பு மேம்பாடு, பசுமை நிதி ஆகியவற்றை இது ஊக்குவிக்கிறது. முதல் கட்டம் 2019 நவம்பரில் தொடங்கியது; இரண்டாம் கட்டம் 2024 நவம்பரில் தொடங்கி 2028 செப்டம்பர் வரை நீடிக்கும்.