கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவில், சுமார் 1,351 மீட்டர் உயரத்தில் பாறைகளில் வளரும் (saxicolous) புதிய லைக்கன் (பாசி) இனமான 'புயெல்லியா மகாராஜென்சிஸ்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியின் 150-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் அக்கல்லூரியின் பெயர் இந்த இனத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.