தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு (SC-NBWL), 'வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு' (IDWH) என்ற மத்தியப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மிக அருகிவரும் இனங்களின் பட்டியலில் பிக்மி பன்றியைச் சேர்க்கப் பரிந்துரைத்துள்ளது.
உலகின் மிகச் சிறிய மற்றும் அரிதான காட்டுப் பன்றி இனமான பிக்மி பன்றி (Porcula salvinia), முக்கியமாக அசாமின் புல்வெளிகளில் வாழ்கிறது; IUCN சிவப்புப் பட்டியலில் 'அருகிவரும் இனம்' (Endangered) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜல்தாபாரா (மேற்கு வங்கம்), உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் பாதுகாப்பை விரிவுபடுத்த இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) பரிந்துரைத்துள்ளது.