ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், போதையில்லா இந்தியா வாரமான 'நஷா முக்த் பாரத் சப்தாஹ் 2026' நாடு முழுவதும் 2026 ஜூன் 17 முதல் 26 வரை அனுசரிக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நஷா முக்த் பாரத் அபியான் இயக்கத்தின் ஒரு பகுதியாக இது நடத்தப்பட்டது. விழிப்புணர்வு, ஆலோசனை, சமூக அளவிலான அணுகல் மூலம் போதைப்பொருள் தேவையைக் குறைப்பதே இதன் நோக்கம்.