நீர் சேமிப்பை மேம்படுத்தவும் நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு (RWH) இயக்கத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், நிறுவனங்கள், வணிகக் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் புதுப்பிக்கப்படுவதுடன் புதிய அமைப்புகளும் உருவாக்கப்படும். பழுதடைந்த அமைப்புகள் சீரமைக்கப்படும்; நீர் எடுக்கும் இடங்களுக்கு அருகில் தடுப்பணைகளும் உறிஞ்சு குழிகளும் அமைக்கப்படும். 2002-ஆம் ஆண்டிலேயே மழைநீர் சேகரிப்பை மாநிலக் கொள்கையாக அறிமுகப்படுத்தி, கட்டடங்களுக்கு அதைக் கட்டாயமாக்கியது தமிழ்நாடு. மாநிலத்தின் 1,202 குறுவட்டங்களில் (வருவாய் உட்பிரிவுகள்) 476 குறுவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது.