இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் (Botanical Survey of India) தாவரவியலாளர்கள் 'செரோபீஜியா தமிழ்நாடுஎன்சிஸ்' (Ceropegia tamilnaduensis) என்ற புதிய தாவர இனத்தைக் கண்டறிந்துள்ளனர். தமிழ்நாட்டின் நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் மலைச்சரிவுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது. நெல்லை வனவிலங்கு சரணாலயம் 2015-ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது; இங்கு 1,748 மீட்டர் உயரமுள்ள சிவகிரி மலை உட்பட 29 மலைச் சிகரங்கள் உள்ளன.