பனியாற்று ஏரி உடைப்பு வெள்ளங்களுக்கு (GLOF) எதிராக முன்னெச்சரிக்கை வழங்க, சமோலி மாவட்டம் வசுந்தரா தாலில் தனது முதல் பனியாற்று ஏரி முன்னெச்சரிக்கை அமைப்பை நிறுவும் பணியை உத்தராகண்ட் தொடங்கியுள்ளது. இவ்வமைப்பு நீர்மட்டம், வானிலை, பனி ஆழம், நில அசைவு, நிலத்தடி வெப்பநிலை, நீரோட்டம் ஆகியவற்றைக் கண்காணிக்கும். வாடியா இமயமலைப் புவியியல் நிறுவனம் தலைமையிலான 22 விஞ்ஞானிகள் குழு, ரூர்க்கியில் உள்ள மத்தியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (CBRI) ஆதரவுடன் இதை நிறுவுகிறது. 2023-இல் தேசியத் தொலையுணர்வு மையம் (NRSC) உத்தராகண்டில் 344 பனியாற்று ஏரிகளைக் கண்டறிந்தது; அவற்றில் 13 ஏரிகளைத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அதிக அபாயமுள்ளவையாக வகைப்படுத்தியது.