மிசோரம் மாநிலம், கவ்சால் மாவட்டத்தின் துவால்தே மற்றும் சாங்த்லாய் கிராமங்களில் தனது முதல் 'பிளக் அண்ட் பே' (Pluck & Pay) திருவிழாவை நடத்தியது. இதன்படி பார்வையாளர்கள் பண்ணைகளிலிருந்து நேரடியாக விளைபொருட்களைப் பறித்து, விவசாயிகளுக்கு அங்கேயே பணம் செலுத்துவர். மாநிலத்தில் கிராமப்புறச் சுற்றுலாவை ஊக்குவிப்பதும், உள்ளூர் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வழங்குவதும் இத்திருவிழாவின் நோக்கமாகும்.