கோவாவின் தலேகாவ்வில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், கோவா காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் கொடி (President's Colour) வழங்கப்பட்டது. இதன் மூலம், சேவையை அங்கீகரித்து வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் காவல் கொடியைப் பெற்ற இந்தியாவின் ஐந்தாவது மாநிலக் காவல்துறையாக கோவா காவல்துறை உருவெடுத்துள்ளது.