அசாமின் மஜுலியும் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கும் ஊரகக் கழிவு மேலாண்மைக்கான சமூகப் பங்கேற்பு முறைகளை உருவாக்கியுள்ளன. மஜுலியில் 20 ஊராட்சிகளில் 19-இல் கழிவு சேகரிக்கப்பட்டு, மைய பொருள் சேகரிப்பு மையங்களில் (CMCF) பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது; 2024 முதல் 82.4 டன் கழிவு சேகரிக்கப்பட்டு பிரம்மபுத்திரா நதியையும் கடலையும் அடையாமல் தடுக்கப்பட்டுள்ளது. தவாங்கில் கிராம மக்கள் மாதந்தோறும் 'ஸ்வச்சதா திவஸ்' (தூய்மை தினம்) கடைப்பிடித்து, கழிவுகளை 22 வகைகளாகப் பிரித்து பொருள் மீட்பு மையங்களுக்கு (MRF) அனுப்புகின்றனர். 26 கிராமங்களில் 30 டன் சேகரிக்கப்பட்டு, 20 டன்னுக்கும் மேல் விற்கப்பட்டு ₹3.53 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.